பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் கிராமத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவி இராஜேஸ்வரியை மாவட்ட கலெக்டர் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் முதல்வரின் நிவாரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாணவியின் பெற்றோரிடம் வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமையப்பெற்றுள்ள 300 படுக்கை வசதிகொண்ட சிகிச்சை அறையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களிடம் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.