Skip to content

திருச்சி அருகே கோவில் பூஜைக்கு வந்த நபரிடம் 16 பவுன் நகை திருட்டு..

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி அவரது மனைவி கௌதமி வயது (33 )தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வேலுச்சாமியின் மாமனார், மாமியாருடன், தனது புதிய சொந்த காரில் கூன்ரங்கம்பட்டி முப்பூசை விருந்துக்கு வந்துள்ளனர்

கௌதமிக்கு சொந்தமான நகைகளை தனது வீட்டில் நகைகளை வைத்து வந்தால் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் தனது ஹேண்ட் பேக்கில் காரில் வைத்துவிட்டு சென்றுள்ளார்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் லாபகமாக காரைத் திறந்து ஹேண்ட் பேக்கை எடுத்து அதில் இருந்த ஆரம், மோதிரம், செயின், தோடு, ஆகிய 16 -பவுன் நகையை எடுத்துக்கொண்டு ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்

சிறிது நேரம் கழித்து காருக்கு வந்த கௌதமி காருக்கு அருகில் தனது ஹேண்ட் பேக் சிதறி கிடைப்பதையும் அதன் அருகே தான் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த பிரேஸ்லெட் கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

பின்பு அதன் உள்ளிருந்த நகையை காணாமல் பதட்டம் அடைந்தார் உடன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் பின்பு கைரேகை நிபுணர் சுர்ஜித் மற்றும் மோப்ப நாய் லிலி வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர் இந்த நகை திருட்டு குறித்து தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காட்டுப்புத்தூர் அருகே முப்பூசை விருந்துக்கு வந்த பெண்ணின் 16 பவுன் நகை திருட்டு போனது இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *