கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியான காந்தி சிலை வளாகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வழியாக ஸ்டான் மோர் சந்திப்பை அடையும் கம்மு குட்டிச்சாலை உள்ளது.
இந்த சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் மாரியம்மன் கோவில் கால்நடை மருத்துவமனை ஐயப்பன் கோவில் காமாட்சி அம்மன் கோவில் வட்டாட்சியர் அலுவலகம் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்பட ஐநூக்கு மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்த சாலை மிகவும் பழுந்தடைந்த நிலையில் இருந்தது. இந்த சாலை பராமரிப்புக்காக நகராட்சி மூலம் 46 லட்சத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பணிகளை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம். முன்னாள் கவுன்சிலர் செல்வம் நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.