நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தனது பர்ஸ் மற்றும் உடைகள் எடுத்து வந்த பையும் தவறவிட்ட அவர் செய்வதறியாமல் திருச்சிக்கு ரயில் ஏறி அங்கிருந்து திண்டுக்கல் செல்ல திட்டமிட்டு ரயில் நிலையம் சென்றுள்ளார் ஆனால் அவர் சென்ற இடம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆட்சியர் அலுவலகமாக ரயில் நிலையமா என தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த அவர் திருச்சி செல்ல வேண்டும் பிளாட்பாரம் எங்கே என கேட்டு அலப்பறையில் ஈடுபட்டார் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.