திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் காவேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ் ஆண்டனி (43) இவர் மது போதைக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருவதுடன் தொடர்ந்து தினமும் மனைவி புனிதாவிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அது போல் புனிதவிடம் பணம் கேட்டு மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் புனிதா சுரேஷ் ஆண்டனியை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் ஆண்டனி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அங்கு சுரேஷ் ஆண்டனியை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஆண்டனி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து புனிதா திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.