திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் . பேரூராட்சி தலைவர் மேகலா வெள்ளையன் தலமையில் நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் மேகலாவை
கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
8 வது வார்டு உறுப்பினர்
பிரியதர்ஷினி 10வது வார்டு உறுப்பினர்
பத்மா 14 வது வார்டு உறுப்பினர் சரண்யா தேவி ஆகியோர்
தங்கள் வார்டுகளுக்கு முறையான சாலை வசதி மின்விளக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராமல் பேரூராட்சி தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்
துணைதலைவர் அபிஷேக் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல், கையெழுத்து மட்டும் போட்டுச் செல்வதாகவும், 3 கூட்டத்திற்கு தொடர்ந்து வராவிட்டால் தகுதி நீக்கம் செய்யும் பரிந்துரையை ஏன் பின்பற்றவில்லை என புகாரெழுப்பி அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.