தமிழக அரசு 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக ஆபாஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியம்மாள், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பி.கே.ரவி, ஊர்க்காவல்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கோவை டிஐஜி முத்துசாமி வேலூர் டிஐஜியாகவும், தஞ்சை டிஐஜி கயல்விழி, கடலோர பாதுகாப்பு படை டிஐஜியாகவும், தலைமை செயலக ஏடிஜிபி வெங்கட்ராமன், நிர்வாகத்துறை ஏடிஜிபியாகவும், கடலோர பாதுகாப்பு படை டிஐஜி சின்னசாமி, சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தூத்துக்குடி பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை கமிஷனராகவும், மெட்ரோ ரயில் பாதுகாப்பு பிரிவு எஸ்பி டாக்டர் பிரபாகர், நீலகிரி எஸ்பியாகவும், தலைமை செயலக துணை கமிஷனர் டாக்டர் செந்தில் குமார், தென்காசி எஸ்பியாகவும், தர்மபுரி எஸ்பி கலைசெல்வன் நாமக்கல் எஸ்பியாகவும், ஸ்பெஷல் டிவிஷன் சிஐடி ஸ்டீபன் ஜேசு பாதம் தர்மபுரி எஸ்பியாகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி சிவக்குமார் சேலம் எஸ்பியாகவும், சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தஞ்சை எஸ்பியாகவும், தஞ்சை எஸ்பி ரவளி பிரியா சென்னை சிபிசிஐடி எஸ்பியாகவும், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்பி ஜெயலட்சுமி ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 20 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.