கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 31 பள்ளிகளில் படிக்கும் 2966 மாணவ, மாணவிகள் ஆரம்ப பள்ளி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தாந்தோன்றிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் உணவு தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் உணவு தயாரிக்கும் பணிகள் துவங்கி, சமையல் முடிந்த பிறகு பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஹாட்பாக்ஸில் உணவுப் பொருட்கள் அடக்கி, அவை 3 வாகனங்களில் ஏற்றி
காலை 8 மணிக்குள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு நடைபெறும் இப்பணிகளை மாநகராட்சி கவுன்சிலரும், மாநகராட்சி கல்வி குழு தலைவருமான வசுமதி பிரபு ஆய்வு மேற்கொண்டார். உணவு தயாரிக்கும் முறை, மாணவர்களுக்கு வழங்கப்படும் அளவு உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.