மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி, சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி.
(வயது 44) இவர் கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளி. இவர் இன்று மாலை தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் கொத்தனார் வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். திருக்கடையூர், ராமன் கோட்டகம் என்ற கிராமம் செல்லும் போது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மோதி சம்பவ இடத்தில் தலை நசுங்கி
உயிரிழந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் இவரது உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ரஜினியின் தாயார் இந்திராணி (62) காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.