Skip to content
Home » இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

 மும்பையில்  நாளை  தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

2004  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதன் முதல் கூட்டம், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதியும், 2-வது கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளிலும் நடைபெற்றது. அடுத்த கூட்டம், நாளை (ஆக.31) மற்றும் நாளை மறுநாள் (செப்.1) மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த மூன்றாவது சந்திப்பு மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாட் என்ற சொகுசு விடுதியில் நடக்கவுள்ளது.

 

இதனிடையே, மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியும் மும்பையில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. இதில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் முதல் கூட்டம், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் அதிகாரபூர்வ இல்லத்தில் நாளை (ஆக.31) இரவு உணவுக்கு பின்னர் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (செப்.1) நடக்கும் கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கான வியூகங்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டங்களுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் தலைமை தாங்குவார்கள். மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!