தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவரது மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (70). கடந்த 22ம் தேதி கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளது என செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் ஊட்டியிலிருந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை பவுன் தங்க நகை, 2 கேமரா, கோல்டு வாட்ச், பட்டுப் புடைவை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அந்தோணிலில்லி புஷ்பம் தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தஞ்சையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் திருட்டு….
- by Authour
