ஆவணி மாதம், வளர் பிறை சதுர்த்தசியை முன்னிட்டு, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பில்,
திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில்,
காவேரிப் பட்டினம் வெங்கடேஷ், கும்பகோணம், மங்கள விலாஸ் சிவக்குமார் உள்ளிட்ட அன்பர்களின் பங்களிப்பில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளிலுள்ள 11 திருக் கோயில்களில் உள்ள அருள்மிகு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைப் பெற்று வருகின்றன.
ஸ்ரீ நடராஜருக்குரிய அபிஷேகங்களாக வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் சிவாகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ( ஆனித் திருமஞ்சனம்) ஆகியன மிகச் சிறப்பிற்குரியன.
மற்றவை மாசி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகியவை நேற்று நடைபெற்றது . ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம்.
இதில் திருக் கூட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சிவகுமார், மோகன், மகேஸ்வரன், சரவணன் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளில் ஒருங்கிணைப்பு பணியை மேற்க்கொண்டனர்.
திருக் கூட்டத்தின் சார்பில் நேற்று அருள்மிகு நடராஜருக்கு அபிஷேகம் நடைப் பெற்ற திருக்கோயில்கள்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர், பட்டீச்சுரம்.
அருள்மிகு சக்திவனேஸ்வரர், திருச்சத்திமுற்றம்.
அருள்மிகு ஐராவதேஸ்வரர், தாராசுரம். அருள்மிகு காசி விஸ்வநாதர், தாராசுரம்.
அருள்மிகு சாட்சிநாத சுவாமி, அவளிவநல்லூர்.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர், வலங்கைமான்.
அருள்மிகு நாக நாத சுவாமி , திருப்பாம்புரம்.
அருள்மிகு கண்ணாயிர நாதர், திருக்காரவாசல்.
அருள்மிகு கைச்சினேஸ்வரர், திருக்கைச்சினம் (கச்சனம்).
அருள்மிகு பல்லவவனேஸ்வரர், திருப்பல்லவவனேச்சரம்.
அருள்மிகு சாயாவனேஸ்வரர், திருச்சாய்க்காடு ( பூம்புகார்). ஆகிய கோவில்களில் வழிபாடு நடைபெற்றது.