கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது..நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் இருந்தே மலை ரயிலுக்கான இருப்பு பாதை துவங்கிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாரம்பரியமிக்க மலை ரயில் மட்டுமின்றி மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கபட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்து 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்த பழமையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் இதனை சிறப்பிக்கும் விதமாக 150 வது ஆண்டு விழாவை
சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறது..நாளை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு 150 ஆண்டு விழா என்பதால் தற்போது ரயில் நிலையம் முழுவதும் கண்ணை கவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..நாளை காலை ரயில்வே சார்பில் மராத்தான் ஓட்டம், ரயில் நிலைய கண்காட்சி திறப்பு, ஆண்டு விழாவை நினைவுபடுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.