பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார். அதற்கு முன்னர் விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது… அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் பல்வேறு பிரச்சினைகளை செயற்கையாக உருவாக்கினார்கள். ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை தேர்தல் ஆணையமும் ஏற்று கொண்டுள்ளது. ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்.