தமிழ் சினிமாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். கடந்த 2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலே விருதையும் பெற்றார். அதன்பிறகு ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றார். இதையடுத்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘இறைவி’ பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள அஞ்சலி, தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் தற்போது தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அஞ்சலி, கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன். பிற மொழிகளில் அதிகம் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தமிழில் என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு நடிப்பில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது. மற்றபடி இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த விரும்பவில்லை.
நான் இயக்குனர் ராமின் மாணவி, அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். புதிதாக நடிக்க வருபவர்களுக்கு தைரியம் நிறைய வேண்டும். கொஞ்சம் வீக்காக இருந்தால் கூட தாக்கு பிடிக்க முடியாது. எந்த விஷயத்தையும் தைரியமாக கையாளுங்கள்.
திருமணம் குறித்து தற்போது யோசிக்கவில்லை. ஆனால் நிச்சயம் திருமணம் செய்வேன். கண்டிப்பாக எல்லோரிடமும் கூறிவிட்டு தான் திருமணம் செய்வேன். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். எனது திரைப்படங்களில் முழு திறனையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறேன் என்று அஞ்சலி கூறினார்.