திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவது தொடர் கதை ஆகி இருந்து வருகிறது.
அதனை அவ்வபோது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை இட்டு
பறிமுதல் செய்து வருகின்றனர்.
இல்லையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஆதம் மாலிக் என்ற பயணி எடுத்து வந்த இரண்டு நியூட்டெல்லா சாக்லெட் ஜாரை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் தங்க கட்டியை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
அவர் கொண்டு வந்த சாக்லெட் ஜாரில் மறைத்து கொண்டுவந்த
149.000 கிராம் எடையுள்ள ரூ. 8.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்த்தினை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.