பெரம்பலூரில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களின் தங்கும் அறை – படிக்கும் அறை – உணவு சாப்பிடும் அறை – உணவின் தரம் – குளியலறை – கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு
மேற்கொண்டார். மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் அரசு செயலாளர் தரேஸ்அஹமது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.