தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 3 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் நேற்று வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னை, ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது . இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.