திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 20 ம் தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உய்யக்கொண்டான் திருமலை, புத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட தகவலின்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டதில் பத்ரிநாதன் 30/23 த.பெ.துரைராஜ் என்பவர் இரண்டு பெண்களை வைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவர்மீது பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில், பத்ரிநாதன் மீது கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
எனவே பத்ரிநாதன் என்பவர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி பத்ரிநாதனனின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கொடுங்குற்ற விசாரணைபிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) விபச்சாரத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேற்படி பத்ரிநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் பத்ரிநாதன் மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.