கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காவிரி ஒழுங்காற்றுகுழு ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காணொளி வாயிலாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில், ஆகஸ்டில் தரவேண்டிய 45.95 டிம்சி நீரில் பெருமளவு கர்நாடகா கொடுக்கவில்லை எனவும், செப்டம்பர் மாதம் தரவேண்டிய 36 டிஎம்சி நீரையும் முழுமையாக தந்ததால் தான் குறுவை சாகுபடி செய்ய முடியும் என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து 1,900 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்து விடும் நிலையில் கூடுதலாக 3,100 கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்துள்ளதாகவும், அதாவது கர்நாடக அணைகளில் இருந்து 5,000 கன அடி நீரை அம்மாநில அரசு திறக்க உத்தரவிடுமாறு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது. நாளைய காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் காவிரி நீர் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.