திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்த 26ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி படித்துறையில் இருந்து மேளதாளம் முழங்க யானை மீது புனித நீர் 300 க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து அன்று
மாலை முதலாம் கால யாக சாலை தொடங்கியது. நான்காம் கால யாகசாலையான இன்று மஹாபூர்ணாஹூதி நடைபெற்று காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் திருக்குட நன்னீராட்டு விழா நடைப்பெற்றது . அதனைத் தொடர்ந்து பக்த கோடிகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் |அப்பகுதி இளைஞர்கள் மற்றும் தெருவாசிகள் செய்திருந்தனர்.இந்த கும்பாபிஷேக விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்து கொண்டனர்.