தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமலியின் தகப்பனாரும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யா மொழியின் 24ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை திருச்சி தெற்கு மாவட்டம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில்பொய்யாமொழியின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு இளைஞர் மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டுக்காண கவுண்டவுனை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா தனஷ்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.