தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் த்ரிஷாவிற்கு அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்களின் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. மேலும் மேலும் தன்னையும், தனது நடிப்பையும் மெருகேற்றி கொண்டே சென்று அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்து நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் குந்தவையாக நடித்த இவரது அழகை காண கண்கோடி வேண்டும் இன்றி ரசிகர்கள் போற்றி புகழ்ந்தனர். சமீப
காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா தற்போது ”ராங்கி” படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரில் த்ரிஷாவை கண்டு ரசிகர்கள் மிரண்டுவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று ராங்கி படம் இன்று ரிலீசாகியுள்ளது. கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் காலை 6.30 மணிக்கு ரசிகர்களுடன் அமர்ந்து படக்குழுவுடன் முதல் நாள் முதல்ஷோவில் பார்த்து கண்டு மகிழ்ந்தார். திரிஷாவிற்கு தியேட்டரில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து தியேட்டரில் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.