திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆதி என்ற ஹரிஹரசுதன் என்ற 15 வயது பள்ளி மாணவன். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் இவர் நண்பர்களுடன் நம்பர் 1 டோல்கேட் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளித்துக் கொண்டிருந்தபோது ஹரிஹரசுதன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.இதில் மாணவன் ஹரிஹரசுதன் நீரில்
மூழ்கி மாயமானார். இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்மவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி மயமான பள்ளி மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.