அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சவுரவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குமரேசன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் கல்லூரியில் படித்து வரும் சிறுமி ஒருவரை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வீடு உள்ளே நுழைந்து கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் உனது தாய் தந்தையரை கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் டாக்டர்களிடம் காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து குமரேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.