மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி செயலர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், சேலம் மாநாட்டிற்கு நிதியாக மாவட்ட செயலாளர் சார்பில் ரூ.15 லட்சமும் இளைஞரணிசார்பில் ரூ.5 லட்சமும் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாநாட்டிற்கு 50,000 நிதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில்,
அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசுகையில்,
திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பூங்கொத்து, பொன்னாடை வழங்குவதற்கு பதிலாக புத்தகங்களை வழங்கலாம் அல்லது அந்தத் தொகையை மாநாட்டுக்கு நிதியாக தாருங்கள்.
நான் அமைச்சராக பொறுப்பேற்ற 8 மாதங்களில் நான்கு முறை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். மயிலாடுதுறை மாவட்டம் திமுகவின் கோட்டை.. மயிலாடுதுறை மாவட்டம் எனக்கு மிகமிக நெருங்கிய மாவட்டமாகும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிரச்சாரத்துக்கு வந்தபோது என்னை கைது செய்து நள்ளிரவு 2மணிவரை வைத்திருந்து விடுதலை செய்தார்கள், இந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் எதிரொலித்து எனக்கு வெற்றிபிரச்சாரமாக அமைந்தது.
மதுரையில் அதிமுக மாநாடு எப்படி நடந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்தது. அங்கு என்ன பேசினார்கள். சமையல் எப்படி இருந்தது என்று தான் பேசிகொண்டார்கள், இந்தியாவில் நடைபெறும் ஆட்சி கேடுகொட்ட ஆட்சியாகும், உலகிலேயே இரணடாவது பணக்காரனாக அதானியை ஆக்கியதுதான் மோடியின் சாதனை ஆகும், பிளைட் இல்லாமல்கூட மோடி வெளிநாடு செல்வார் ஆனால் அதானி இல்லாமல் வெளிநாடு செல்லமாட்டார், அதிமுக பாஜக இரண்டு கொள்ளையர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றார்.
இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில்மகேஷ்பொய்யமொழி மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.