சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நாகை அவுரி திடலில் இன்று நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய உதயநிதி
ஸ்டாலின் கூறுகையில் ; துவாராக்கா விரைவு சாலை ஒன்றிய அரசின் திட்டத்தில் 1 கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்து ஊழல். ரமணா திரைப்பட பாணியில் இறந்து போன நபர்களுக்கு ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கி ஊழல். கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறி ஏமாற்றியவர் பிரதமர் மோடி என்று ஒன்றிய அரசின் சிஏஜி அறிக்கையை பட்டியலிட்டு விமர்சித்தார். பாஜக- அதிமுக இரண்டு கொல்லை கூட்டத்தையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாடு என்ற வீட்டின் உள்ளே அதிமுகவின் பின்புலத்தில் நுழையும் பாஜக என்னும் விஷ பாம்பை அடித்து விரட்ட வேண்டும். பாஜகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவையும் சேர்த்து ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.