ரஜினி நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
குறிப்பாக வசூலில் முதல் நாளில் இருந்தே சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளிவந்த முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் உச்சத்தை தொட்டுக்கொண்டே போகும் ஜெயிலர் 13 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து
தெரியவந்துள்ளது. அதன்படி, ஜெயிலர் படம் வெளிவந்த 13 நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தநிலையில் ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் தலைவர் ஜெயிலர் நிரந்தரம் என கேக்கில் பதிவிட்டு ரஜினி தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். டைரக்டர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.