Skip to content

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்….. யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது..

  • by Authour

திருச்சி, கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக வரும் 28 ம் தேத் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி படித்துறையில் இருந்து மேளதாளம் முழங்க யானை மீது புனித நீர் எடுத்துவர பட்டது. இந்த ஊர்வலத்தில் ஒட்டகம், குதிரை, ,ஜல்லிக்கட்டு காளை, கிடா போன்ற விலங்குகளுக்கு அலங்காரம் செய்து 300 க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.

இன்று மாலை முதலாம் கால யாக சாலை தொடங்கி வரும் 28 ஆம் தேதி நான்காம் கால யாகசாலை தொடர்ந்து மஹாபூர்ணாஹூதி நடைபெற்று காலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அஷ்டபந்தன

மஹா சம்ப்ரோக்ஷணம் திருக்குட நன்னீராட்டு விழா நடைப்பெரும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *