புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி, தொடங்கிவைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள், ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள் , பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சிரம்யா ,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா ஆகியோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.