இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிய திட்ட இயக்குனரான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர்.
இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பழனிவேல் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் . அவர் தற்போது தொழிற்சங்க மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி குடும்பத்தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், விழுப்புரம் ரெயில்வே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் விழுப்புரம் ஏழுமலை
பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தார். அதன் பிறகு சென்னை தனியார் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தார். தொடர்ந்து, திருச்சி என்ஐடியில், எம்.இ. மெக்கானிக்கல் பயின்றார். அதன் பிறகு 2014-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வில் பணிக்கு சேர்ந்தார்.
இதனிடையே அவர், சென்னை ஐ.ஐ.டி.யிலும் பயிற்சி பெற்றார். அவர் தன்னுடைய தனித்திறமையால் உயர்ந்து தற்போது சந்திரயான்-3 திட்ட
இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம் அவர் விழுப்புரம் மண்ணுக்கு
மட்டுமின்றி இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். விண்கலத்தை உலகிலேயே முதன்முதலாக இந்தியா இன்று, நிலவின் தென் துருவத்தில் இறக்கி வெற்றி கண்டிருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். இந்த வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கிறோம்.
வெற்றியை நினைத்து பார்க்கையில் வீரமுத்துவேலின் தந்தை Pபழனிவேல் ரயில்வே தொழிலாளர் , தொழிற்சங்க செயல் தலைவர் என்பதிலும், திரு.வீரமுத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தவர் என்பதிலும் எங்களுக்கு (ரயில்வே தொழிலாளர்களுக்கு) எல்லையில்லா மகிழ்ச்சியே கொண்டாடும் விதமாக பொன்மலை ரயில்வே பள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரயில்வே தொழியாளர்கள் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மக்கள் சக்தி இயக்க சார்பில் கே.சி. நீலமேகம், ஆர்.இளங்கோ, ஆர்.கே.ராஜா, சிறப்பு விருந்தினராக ரயில்வே சொசைட்டி இயக்குனர் ஆர்.விஜயகுமார், 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ், தலைமை ஆசிரியர் கலையரசன் , தேவா , மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.