புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சங்கா்(33) இவா் நேற்று சந்திரயான்3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை சந்தித்து பேட்டி கண்டு நேரடி ஒளிபரப்பு செய்து விட்டு இரவில் காரில் நெல்லை திரும்பிக்கொண்டிருந்தார்.
நாங்குனேரி டோல்கேட் அருகே வந்தபோது நடந்த சாலை விபத்தில் சங்கர் உயிரிழந்தார். இவருடன் பயணித்த செய்தியாளர் நாகராஜன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த சங்கர் குடும்பத்துக்கு இ-தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.