சந்திரயான் 3ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. லேண்டரின் தரையிறக்கத்தால், 2 மணி நேரம் அங்கு மணல் மழை பொழியும். 4 மணி நேரம் கழித்து முக்கிய நிகழ்வு நடைபெறும்.
அதாவது லேண்டரில் இருந்து சாய்வு தளம் மூலம் ரோவர் இறங்கி வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். நிலாவில் உள்ள நடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை பற்றி ஆய்வு செய்து துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும். பூமியின் நேரப்படி 14 நாட்களும், நிலவின் நேரப்படி 1 நாளும் ரோவர் இந்த ஆய்வில் ஈடுபடும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.