தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி வருகிறார்.
100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமான பூஜா ஹெக்டேவும், இசையமைப்பாளர் தமனும் படத்திலிருந்து விலகிவிட்டனர். இதுதவிர இந்த படத்தில் ஸ்ரீலீலா, பிரகாஷ்ராஜ், சுனில், ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.