இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்த விடுபட்டு போன 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான செய்திக்குறிப்பில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டு போன 21 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000 மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000 ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
