புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு கூடுதல் செயலாளர் / ஓய்வூதிய இயக்குநரக இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீகாந்த்த, மாவட்ட கருவூல அலுவலர் ராஜலெட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளனர்.