நடிகர் விஜய் உத்தரவுப்படி விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் ஆக.26ஆம் தேதி நடைபெறுகிறது. மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட 10 அணிகள் மற்றும் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்ட தலைவரும் அவர்களின் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தலா மூன்று பேரை அழைத்து வர ஆணையிடப்பட்டுள்ளது. அத்துடன் நகர ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் நடிகர் விஜய் உத்தரவுப்படி நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.