தஞ்சை மாவட்டம்… பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அய்யம்பேட்டை அடுத்த சூலமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்து சீர் வரிசை தட்டை வழங்கினார். பாபநாசம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் லதா வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் முத்துச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலர் தஞ்சை பாதுஷா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு
தலைவர் சுமதி, பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி, துணைத் தலைவர் அழகேசன், அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் துளசி அய்யா, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், பக்ருதீன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பாபநாசம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.