பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரியஅளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பூலாம்பாடியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் மலேசியா நாட்டிற்கும் காய்கறிகளை அனுப்பிவைக்கும் திட்டமும் உள்ளது.இந்த திட்டத்தின் கீழ்
காய்கறிசாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்,உதவிகள் ப்ளஸ்மேக்ஸ் நிறுவனத்தின் மூலம் செய்யப்பட உள்ளது.காய்கறிக்கு சராசரியாக நல்ல விலை கிடைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் என்பதால் டத்தோபிரகதீஸ்குமார் இந்த முயற்சியை சேவைநோக்குடன்
முன்னெடுத்துவருகிறார்.இதில் ஆர்வம் கொண்ட பல விவசாயிகள் காய்கறி பயிரிட சம்மதம் தெரிவித்து வருவாயை பெருக்க ஆர்வமுடன் உள்ளனர்.இதுதொடர்பாக இரண்டு ஆலோசனை கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.இந்த நிலையில்
உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு
அலுவலகத்தின் திறப்பு வி ழாநடைபெற்றது.அதில் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டுஅலுவலகத்தை திறந்துவைத்தார்.பின்னர் அவர் பேசும் போது,அனைவரின் கூட்டு முயற்சியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் மலேசியா மணிவாசகம், டத்தோ நேர்முக உதவியாளர் மணி,பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி செங்குட்டுவன்,கவுன்சிலர்கள் ராமதாஸ்,மாணிக்கம் மற்றும் கடம்பூர் பாலு, அருண்,ஆறுமுகம்,அக்ரி நவநீதன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.