பெரம்பலூர் மாவட்ட திராவிட கழக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில், மாவட்டத் தலைவர் தங்கராசு அவர்களின் முன்னிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து அம்மா உணவகம் அருகில் கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தங்கராசு தொடக்க உரையாற்றி, இளைஞரணி துணைத் தலைவர் தமிழினியன், வரவேற்பு உரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விஜயேந்திரன், நகர தலைவர் ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் ஆதிசிவம், நகர அமைப்பாளர் துரைசாமி, ஒன்றிய தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பிச்சைப்பிள்ளை, ஒன்றிய அமைப்பாளர் அண்ணாதுரை, சட்டக்கல்லூரி மாணவர் கழகம் திராவிட செல்வன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.