தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது.
2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர்கள் மத்தியில் கட்டாயமாக நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.