தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவிடும் வகையிலும் முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை செயல்படுத்திட அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்கள் மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ, மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ஆர். வேல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/08/cm21.jpg)