நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னரை கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி ஆகியற்றின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து அவர் பேசியதாவது… நீட் தேர்வில் தோல்வியடைந்த 21 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அந்த 21 தற்கொலைகளும் கொலையே, இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு என குற்றஞ்சாட்டிய அமைச்சர் உதயநிதி ஒவ்வொரு மாவட்டத்திலும் 8000 முதல் 10,000 பேர் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன அதிகாரம் உள்ளது; ஆளுநர் ரவி என்ன மக்கள் பிரதிநிதியா என கேள்வி எழுப்பிய அவர் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூற ஆளுநர் ரவி யார் ? அவர் ஒரு போஸ்ட்மேன் தான்.