உலக உலக புகைப்பட நாள் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு,
சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம். இந்நிலையில் புகைப்பட தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சென்னையில் உள்ள பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிகழ்வுகளை உறைய வைத்தும் – நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.