சென்னை மணலி அருகே வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். கொசு விரட்டும் லிக்விட் இயந்திரம் சூடாகி உருகியதுடன் அட்டைப்பெட்டியின் மீது விழுந்து தீப்பிடித்துள்ளது. தீ பிடித்ததால் வீடு முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு சந்தான லட்சுமி, அவரது 3 பேத்திகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.