தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (24). இவர் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சூர்யா ( 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் வீட்டின் முன் இருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது….
- by Authour
