திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி பகுதியில் பிரபு என்பவர் நாகா என்ற பெயரில் அரசு அனுமதியுடன் நான்கு மாத காலமாக மனமகிழ் மன்றம் நடத்தி வந்தார். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது அருந்தி விட்டு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வருண்குமார் உத்தரவின் பேரில், திருவெறும்பூர்
டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர் . அப்போது அங்கு மது அருந்தி நிலையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து , அவரிடமிருந்து விளையாட பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள், ரூ.9,300 ரொக்கம், 3 டூவீலர்கள் ஆகியவற்ற போலீசார் பறிமுதல் செய்தனர்.