சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்பியல் துறை சார்பில், மாணவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இதில் வனவிலங்குகள் புகைப்படத்தின் தாக்கம் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது இதில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி உதவி பேராசிரியர் பால மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை மேற்கொண்டார் இந்த கண்காட்சியின் விழாவின் துவக்க நிகழ்ச்சியாக மாணவர்களின் ஓவியம்
மற்றும் புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது. மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான புகைப்படம் தொடர்பான போட்டியும் நடத்தப்பட்டது.
இந்த புகைப்பட கண்காட்சியை திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த புகைப்பட கண்காட்சிக்கான ஏற்பாடுகளை காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர் பிளெஸ்ஸி ,பேராசிரியர் செந்தில தேவி மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.