தெலங்கானாவில் தலித்து பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்காததை கண்டித்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற ஓய்.எஸ்.ஆர் ஷர்மிளாவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு ஆரத்தி எடுத்து, தனது எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தினார்.
தெலங்கானா மாநில அரசு பட்டியிலனத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதலீட்டு தொகையாக ரூ.10 லட்சம் முழு மானியமாக தலித்தபந்து திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தலித்தபந்து திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வேல் அடுத்த தீகுல் கிராமத்தை சேர்ந்த அப்பகுதி மக்கள் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேசுவதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரியும், தெலங்கானா ஒய்.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஷர்மிளா அங்கு இன்று செல்ல இருந்தார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள லோட்டஸ் பாய்ண்ட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஷர்மிளா, வெளியே செல்லாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் ஷர்மிளா தான் கஜ்வேல் செல்வதாக கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போலீசார் அவர் செல்ல முடியாதபடி சுற்றி வளைத்ததால் வீட்டில் இருந்து தட்டில் கற்பூரம் வைத்து கொண்டு வரும்படி கூறி தன்னை வெளியே செல்லவிடாமல் தடுத்து நின்ற போலீசாருக்கு கற்பூர ஆராத்தி எடுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் தனது வீட்டின் அருகே கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தனது வீட்டின் முன்பு மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டத்தில் பேசிய ஷர்மிளா, “ கே.சி.ஆர் பட்டியிலன துரோகி, கே.சி.ஆர் தன்னை பார்த்து பயப்படுகிறார். பி.ஆர்.எஸ். கட்சி என்பது கொள்ளை ராஷ்டிர சமிதியைக் குறிக்கிறது. தலித்துபந்து திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. தலித்துபந்து ஊழல் பற்றி முதல்வர் கேசிஆர் கூறினார், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. கே.சி.ஆருக்கு ஆட்சியமைக்கும் தகுதி இல்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் பதவியில் கே.சி.ஆர். இதற்கு இருக்க வேண்டும்” என கோஷமிட்டார்.