தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாலை டிவிட்டரில் ஒரு தகவலை பதிவிட்டுளளார். அதில் கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டோஷாப் கட்சியின் மாநில தேசிய நிர்வாகிகள் என குறிப்பிட்டிருந்தாலும் அவர் பாஜ பிரமுகர்களை குறிப்பிட்டிருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்காக பயணிகளை மீண்டும் சோதனை செய்து விமானத்திற்குள் அனுமதிதத்தாகவும் கதவை திறந்த பிரமுகர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த டிவிட்டர் சுமார் 1லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் தாண்டி வைரலாகியுள்ளது. விமானத்தின் கதவை திறந்தது யார்? மன்னிப்பு கடிதம் கொடுத்தது யார்? என தமிழக அரசியல் பிரமுகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்..